யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Thulsi
யாழ்ப்பாணம் (Jaffna) - குருநகர் பகுதியில் 42 போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (22.11.2025) யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 22,24 வயதுடைய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
யாழ்ப்பாணம் காவல் பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அவர்களின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி