தமிழர் பகுதியில் கொடூரம் - மாமனாரை கொன்ற மருமகன் கைது
மகளை தாக்க முயன்றவரை தடுத்த மாமனாரை தாக்கிக் கொன்ற மருமகனையும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறிய தந்தையையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி - அக்கராயன் - ஸ்கந்தபுரம் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து மகள் தனது தந்தையின் வீட்டுக்கு வந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அங்கு வந்த மருகமன் (மகளின் கணவர்) தனது மனைவியை தாக்க முயன்றுள்ளார். அப்போது மாமனார் தடுத்துள்ளார்.

இதில் அவர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இடையிலேயே உயிரிழந்தார்.
கதிரவேலு சிவராசசிங்கம் (வயது 56) என்பவரே உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பில் 25 வயதான மருகமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அக்கராயன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |