யாழில் போதை பொருளுடன் சுற்றி வளைக்கப்பட்ட சந்தேகநபர்கள்

Sri Lanka Police Jaffna Law and Order
By Kajinthan Nov 26, 2025 08:13 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் வைத்து 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

செய்தி - கஜிந்தன்

முதலாம் இணைப்பு

யாழில் இரு வெவ்வேறு இடங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் போதை பொருளுடன் சுற்றி வளைக்கப்பட்ட சந்தேகநபர்கள் | Two Suspects Arrested With Ice Drugs Vattukkottai

வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மூளாய் - வேரம் பகுதியில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இரண்டு கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலுக்கும் வர்த்தக போருக்கு இடையில் அமெரிக்கா பறக்கும் கார்னி

வலுக்கும் வர்த்தக போருக்கு இடையில் அமெரிக்கா பறக்கும் கார்னி

போதைப் பொருட்கள்

அவர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்பவர் என தெரியவந்துள்ளது.

அத்தோடு, பொன்னாலை தெற்கு, சுழிபுரம் பகுதியில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் போதை பொருளுடன் சுற்றி வளைக்கப்பட்ட சந்தேகநபர்கள் | Two Suspects Arrested With Ice Drugs Vattukkottai

இந்த இரண்டு கைது நடவடிக்கைகளும் வட்டுக்கோட்டை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மணலாறு உதயபீடம் துயிலுமில்லத்திற்குச் சென்றவர்களை மறைந்திருந்து தாக்கிய இராணுவம்

மணலாறு உதயபீடம் துயிலுமில்லத்திற்குச் சென்றவர்களை மறைந்திருந்து தாக்கிய இராணுவம்

வடக்கிலுள்ள காவல்துறையினருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

வடக்கிலுள்ள காவல்துறையினருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026