ஜனாதிபதி அநுரவிற்கு வெளிநாடொன்று விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பு
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரவுடனான சந்திப்பின் போது இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசொமதா அகியோ இந்த அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்துள்ளார்.
முதலீடு
அத்தோடு, இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் அதன்போது உடன்பாடு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜப்பானிய அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்த பாதுகாப்பு ஒத்துழைப்பு உதவித் திட்டத்தில் இலங்கையையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இசொமதா அகியோ குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரம்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத்தில் தேசிய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இணைந்து மேற்கொள்ளும் திட்டம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டதோடு அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் தூதுவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் விமான நிலைய முதலீடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
