ஐபோன் 15 வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்: விலை எவ்வளவு தெரியுமா...!
நேற்றையதினம் ஆப்பிள் நிறுவனத்தினால் ஐபோன் 15 மொபைல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
இதற்காக பலர் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்த நிலையில் இதன் அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் வெளியாகியுள்ளது.
இதில் 48 மெகாபிக்சல் டூயல் கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட 2x டெலிஃபோட்டோ கேமரா உள்ளது, இது பயனர்களுக்கு உயர்தர படங்கள் மற்றும் 4K காணொளிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 15 ஆனது 147.6 x 71.6 x 7.8mm மற்றும் 171g எடையில் வெளியாகி Iphone 14ஐ விட ஒரு கிராம் குறைவாகவும் காணப்படுகின்றது.
இதில் iOS 17 அப்டேட்டும் கூட வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை Type - C சார்ஜிங் போர்ட் இடம்பெற்றிருக்கின்றது.
அதேவேளை, ஐபோன் 15 ப்ரோவுக்கு 6.1 இன்ச் மற்றும் iPhone ப்ரோ மேக்ஸுக்கு 6.7 இன்ச்களில் வருகிறது. இது நீலம், கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ளது.
விலை எவ்வளவு
ஐபோன் 15 இன் விலை 799 டொலர்களாவும் மற்றும் ஐபோன் 15 Plus 999 டொலர்களாவும் காணப்படுகிறது. இது கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 14 ஐ விட சற்றே மலிவான விலையில் கிடைக்ககூடியதாக இருகின்றது.
ஆப்பிள் அறிவித்துள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம், முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பைச் சேர்ப்பதாகும்.
கடந்த ஆண்டு ஐபோன்14 ப்ரோ மாடல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆப்பிள் முதன்முதலில் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேக்களை அறிமுகப்படுத்தியது.
ஆனால் அனைத்து புதிய ஐபோன் 15 மாடல்களும் இப்போது டைனமிக் ஐலேண்ட் அம்சத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.