யாழ்ப்பாணத்தை நிலைநிறுத்தினோம்..! இந்திய அமைதிப்படைகளின் தோல்விக்கு காரணம் - இந்தியப் படைத்தளபதி
இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் (Srilanka) மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி கண்டமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
முன்னாள் இராஜதந்திரியும் ராஜீவ் காந்தி உதவியாளருமான மணி சங்கர் அய்யர், இலங்கையில் இந்திய அமைதிப்படையின் தோல்விக்கு இராணுவம் மற்றும் உளவுத்துறையைக் குற்றம் சாட்டி சமீபத்தில் கூறிய கருத்துக்கள் தொடர்பிலேயே ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தீபக் மெஹ்ரா மறுப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் (Indian Peace Keeping Force - IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் ஆரம்பமாகியிருந்தது.
தலைமை வெற்றிகளை வீணடித்தது
இதன் முதற்படியாக இந்திய அமைதி காக்கும் படையினரால் விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கிய யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவும், புலிகளின் ஆயுதங்களைக் களையவும் ஒப்ரேஷன் பவான் (Operation Pawan) என பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், 1987 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி கண்டமை தொடர்பில், அந்த நாட்டின் உளவுத்துறை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இந்தியப் படைத்தளபதி ஒருவர் மறுத்துள்ளார்.
அது ஒரு இராணுவ தோல்வி அல்ல, மாறாக ஒரு அரசியல் தோல்வி என்று மேஜர் ஜெனரல் தீபக் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியப் படைகள், யாழ்ப்பாணத்தை நிலைப்படுத்தியது மற்றும் தமிழ் தேர்தல்களைச் சாத்தியமாக்கியது, ஆனால் இந்தியாவின் தடுமாற்றமான தலைமை அதன் வெற்றிகளை வீணடித்தது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்... பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |