மீட்பரில் இருந்து ஆக்கிரமிப்பாளரான படையொன்றின் ஈழத்து அட்டூழிய பிரசாரம்!
மருத்துவமனைகளைப் போர் தவிர்ப்பு வலயமாக மதிக்க வேண்டிய போர் நெறிமுறைகளை மீறி இலங்கையில் நிகழ்த்தப்பட்ட முதல் சம்பவமாக யாழ். போதனா மருத்துவமனை படுகொலை காணப்படுகிறது.
1987 ஒக்டோபர் 21, தீபாவளி நாள், ஈழத் தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத துயர நாளாகும்.
இலங்கை-இந்திய உடன்படிக்கையின் கீழ் அமைதி காக்க வந்த இந்தியப் படைகள், யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்ய தொடங்கின.
இதில் ஒரு அங்கமாக உயிர்காக்கும் இடமான யாழ். போதனா மருத்துவமனை படுகொலைக் களமாக மாறியது.
இந்தப் படுகொலையை இந்தியா ஒப்புக்கொள்ளவோ, மன்னிப்பு கேட்கவோ இல்லை. ஆனால் இலங்கை அரசு மற்றும் மனித உரிமைக் குழுக்கள் இதனை இனப்படுகொலை எனக் குறிப்பிட்டன.
இந்தியாவின் இச்செயல், பின்னர் இலங்கை அரசின் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களுக்கு முன்னோடியாக அமைந்தது.
இலங்கை அரசின் பல தசாப்த கால அடக்குமுறைக்குப் பிறகு ஈழத் தமிழர்களால் ஒரு சாத்தியமான மீட்பராக ஆரம்பத்தில் வரவேற்கப்பட்ட இந்தியப் படைகள் பாதுகாவலரிலிருந்து ஆக்கிரமிப்பாளராக மாறியது.
இந்நிலையில் இந்தியப் படைகளின் படுகொலைகள், அத்துமீறல்கள், காணாமல் போதல்கள் என இன்றுவரை நீடிக்கும் அதிர்ச்சியின் மரபை விட்டுச் சென்ற வடுக்கள் தொடர்பில் ஆராய்கிறது அவலங்களின் அத்தியாயங்கள்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
