புதிய தலைமையின் கீழ் விளையாட நேரிடும் - எச்சரிக்கும் டோனி
இந்தியன் பிரிமியர் லீக் ஆட்டங்கள் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றிருந்தது.
இருப்பினும் குறித்த போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களின் மோசமான பந்து வீச்சினை அந்த அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் அதிகளவான அகலப்பந்துகளையும், முறையற்ற பந்துகளையும் வீசியுள்ளனர்.
டோனி
சென்னை அணியின் பந்துவீச்சு தொடர்பில் டோனி,
"வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய செயல்பாட்டால் முன்னேற்றம் அடைய வேண்டும்.
ஆடுகளத்தின் தன்மைகளுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப பந்துகளை வீச வேண்டும். களத்தடுப்பு திட்டத்திற்கு அமைய பந்து வீச வேண்டும்.
இவ்வாறு மோசமாக தொடர்ந்து விளையாடுவீர்கள் எனில் வேறு தலைமைத்துவத்தின் கீழ் விளையாட வேண்டி வரும்." என டோனி கடுமையாக சாடியுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)