2060 இல்170 கோடியாக உயரப்போகும் மக்கள் தொகை : எந்த நாட்டில் தெரியுமா !
இந்தியாவின் (India) மக்கள்தொகை 2060 களின் முற்பகுதியில் 170 கோடியாக உயரும் என ஐக்கிய நாடுகள் சபை (United Nations) தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள்தொகை பிரிவு உலகின் மக்கள்தொகை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தற்போது (2024 இல்) உலக மக்கள்தொகை 820 கோடியாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரும் 50 மற்றும் 60 ஆண்டுகளுக்கு உலகில் மக்கள்தொகை தொடர்ந்து பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடியாக அதிகரிக்கும்
இது 2080 களின் நடுப்பகுதியில் சுமார் 1030 கோடியாக அதிகரிக்கும் எனவும் உச்சத்தை அடைந்த பிறகு உலக மக்கள்தொகை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் மக்கள் தொகை 1020 கோடியாக குறையும் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)