“கொல்கத்தா அணியால் ஐ.பி.எல் பட்டத்தை வெல்ல முடியாது”ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி!
இந்தியன் பிரிமீயர் லீக்கின் (ஐ.பி.எல்.) மினி ஏலம் நேற்றைய கடந்த (19) திகதி டுபாயில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இது தொடர்பில் ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்தன.
அதில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணி அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
மிட்சல் ஸ்டார்க்
அதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அவுஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் பெற்றார்.
இந்நிலையில் “கொல்கத்தா அணி அதிக தொகைக்கு வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தாலும் கோப்பையை வெல்ல முடியாது” என ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா அணியின் துடுப்பாட்ட வரிசை
இது தொடர்பாக அவர் கூறுகையில் "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது.
பந்துவீச்சில் இருக்கும் பலம் அந்த அணியின் துடுப்பாட்டத்தில் இல்லை என்றே நான் கருதுகிறேன். கொல்கத்தா அணியில் இருக்கும் துடுப்பாட்ட வீரர்கள் திறமையானவர்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை. ரிங்கு சிங் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
ஆனால் இந்த துடுப்பாட்ட வரிசையை வைத்து கொண்டு கொல்கத்தா அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியுமா என்றால் அது சந்தேகம் தான். துடுப்பாட்ட வரிசை மிக மோசமானது இல்லை என்றாலும், அவர்களால் நிச்சயம் முதல் 4 இடங்களுக்குள் வர முடியாது என்பதே எனது கருத்து.
கொல்கத்தா அணியின் பலவீனம்
துடுப்பாட்ட வரிசையே கொல்கத்தா அணியின் பலவீனமாக நான் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரு முறை (ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024க்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் முழு அணி
நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (கேட்ச்), ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, கே.எஸ். பாரத், ஸ்டார்க். , அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மனிஷ் பாண்டே, முஜீப் உர் ரஹ்மான், கஸ் அட்கின்சன், சாகிப் ஹுசைன்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |