கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில் ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
15 நாட்கள் சிறை
இதையடுத்து, ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதிகாரி பேசியதாக தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
மேலும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |