சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
16-வது ஐ.பி.எல். தொடரில் இன்று (30) இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும் 41-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளது.
தோனி தலைமையிலான சென்னை அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி 3 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 2 முறை) 10 புள்ளிகள் பெற்றுள்ளது.
சென்னை பஞ்சாப்
முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது.
ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 4 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. வெற்றி, தோல்வியை மாறி, மாறி சந்தித்து வரும் அந்த அணி தனது கடந்த ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிராக 258 என்ற ஓட்ட இலக்கை எதிர்த்தாடுகையில் 201 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி கண்டது.
சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் பஞ்சாப் அணி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.
அணி பட்டியல்
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்,
சென்னை சூப்பர் கிங்ஸ்:ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி (c), பதிரானா, துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா.
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (c), அதர்வா டெய்ட், சிகந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், ஜிதேஷ் ஷர்மா, ஷாருக்கான், ராகுல் சாஹர், ரபடா, அர்ஷ்தீப் சிங்.
மும்பை ராஜஸ்தான்
மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு (42-வது) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ரோயல்சை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். போட்டித் தொடரில் இது ஆயிரமாவது ஆட்டமாகும்.
மும்பை அணி 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 4 தோல்விகளை சந்தித்துள்ளது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது.
அந்த அணி தனது முந்தைய ஆட்டத்தில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது.