ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படுகிறதா..! முற்றுப்புள்ளி வைத்தார் ஜெய்ஷா
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் திகதி சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியுடன் தொடங்கவுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்டிருந்த ஐபிஎல் அட்டவணை முழுமையாக இல்லாமல் ஏப்ரல் 7ஆம் திகதி வரையிலான போட்டிகளுக்கு மட்டுமே இருந்தது.
மீதமுள்ள போட்டிகள் வெளிநாட்டில்
நாடு முழுவதும் தேர்தல் நடைபெறுவதால், மீதமுள்ள போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படலாம் எனவும், தேர்தல் திகதி வெளியானவுடன் அதற்கேற்றவாறு திகதிகள் அறிவிக்கப்படும் எனவும் இருவேறு தகவல்கள் பரவின.
தற்போது தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தேர்தல் நடைபெற்றாலும், அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும் என ஜெய் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால், முழுமையான போட்டி அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |