முதல் போட்டியில் மண் கௌவ்வியது சென்னை அணி
புதிய இணைப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாம் இணைப்பு
குஜராத் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் சென்னை அணி வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது.
அதிரடியாக ஆடிய ருத்துராஜின் அரை சதத்துடன்(92) மொத்தமாக 178/7 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சென்னை அணி ஆரம்பம்முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு ஆட்டமிழப்புகளையும் பறிகொடுத்தது.
மேலும் குஜராத் அணி சார்பில் ரசித் கான் நான்கு ஓவர்கள் பந்து வீசி 2 ஆட்டமிழப்புகளை கைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு

"கிரிக்கட் திருவிழா" என அழைக்கப்படும் ஐபிஎல் 2023 ஆண்டுக்கான முதல் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
முதல் போட்டியில் "நடப்பு சாம்பியன்" ஆனா குஜராத் டைடன்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணயசுழட்சியில் வென்ற குஜராத் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதனடிப்படையில் சென்னை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக டெவோன் கொன்வே ருட்ராஜ் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.