மும்பை அணியை முதல் வெளியேறுதல் சுற்றில் எதிர்க்கும் லக்னோ..!
16-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் முதல் வெளியேற்றுதல் (Eliminator) சுற்று இன்று இடம்பெறவுள்ளது.
இன்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.
இதில் வெற்றி காணும் அணி அகமதாபாத்தில் 26ம் திகதி நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் குஜராத்தை எதிர்த்து விளையாடவுள்ளது.
அணி விபரம்
மேலும் தோல்வி காணும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
இந்த மூன்று ஆட்டங்களிலும் லக்னோ அணியே வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கரண் ஷர்மா, குயின்டான் டி காக், குருணல் பாண்ட்யா (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, பிரேராக் மன்கட், கே.கவுதம், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்குர், மொசின் கான்.
மும்பை இந்தியன்ஸ் - இஷான் கிஷன், ரோகித் சர்மா (கேப்டன்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியுஷ் சாவ்லா, பெரன்டோர்ப், குமார் கார்த்திகேயா அல்லது ஹிருத்திக் ஷோகீன், ஆகாஷ் மத்வால். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்
