கேள்விக்குறியாகும் பாதுகாப்பு: காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
நூருல் ஹுதா உமர்
அம்பாறை, இறக்காமம் 07– நைனாகாடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நிந்தவூரைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் காட்டு யானை எதிர்பட்டுள்ளது.
காட்டு யானையைக் கண்டு அச்சமடைந்தவர் தப்பியோட முயன்றபோது அவர் இடறி விழுந்துள்ளார்.
பாதுகாப்பு கேள்விக்குறி
இதன்போது அவரை காட்டு யானை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காட்டு யானைகள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும் வீதிகளிலும் பிரவேசிப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |