சமையல்கலை நிபுணர் தாமு காலமானார்
இந்தியாவின் சமையல்கலை நிபுணர் தாமு என்று அழைக்கப்படும் கே.தாமோதரன் காலமானார்.
அவரது 72 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் இன்று (25) காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்றையதினம் காலமாகியுள்ளார்.
உலக சாதனை
இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான இரசிகர்களைப் பெற்றார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில், 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
சமையல் கலையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பின் காரணமாக பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.
உணவக முகாமைத்துவம், சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் நிபுணர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |