மோதல்களுக்கு பின்னர் பொதுவெளியில் தோன்றிய ஈரான் ஆன்மிக தலைவர்
இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தொடங்கியதிலிருந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி முதல் முறையாக பொதுவெளியில் தோன்றியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை இரவு தெஹ்ரான் நகர மையத்தில் உள்ள தனது அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இமாம் கொமெய்னி ஹுசைனியாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இமாம் ஹுசைன் (அலை) என்பவரின் நினைவு தினத்தைக் குறிக்கும் விழாவில் அயதுல்லா கமேனி கலந்து கொண்டார்.
நினைவு தினத்தில் பஙகேற்ற கமேனி
இன்றிரவு(05) முஹர்ரமின் ஒன்பதாவது இரவு, இதில் மூன்றாவது ஷியா இமாம் ஹுசைன் இப்னு அலி மற்றும் அவரது கூட்டாளிகள் கர்பலா போரில் கொல்லப்பட்டனர்.
ஜூன் 13 அன்று தொடங்கிய இஸ்ரேலுடனான மோதலின் போது பதிவு செய்யப்பட்ட உரையில் கமேனி கடைசியாக தோன்றினார், அப்போது ஈரானின் உயர்மட்ட தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
இதேவேளை இஸ்ரேல் - ஈரான் போரில், ஈரானிய ஆன்மிக தலைவர் பதுங்கு குழியில் பதுங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானில் உள்ள அணுசக்தி மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது, அதன் பிறகு இஸ்ரேலை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களுடன் ஈரான் பதிலடி கொடுத்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
