சவுதியில் நிரந்தரமாக குடியேறப்போகும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ(cristiano ronaldo), சவுதி அரேபியாவில் (saudi arabia)நிரந்தரமாக குடியேறப்போவதாக அறிவித்துள்ளார்.
சவுதியில் வாழ்வது பாதுகாப்பாகவும், அமைதியான சூழல் மற்றும் அன்பான கலாசாரத்துடன் காணப்படுவதால் இங்கு நிரந்தரமாக குடியேற முடிவு செய்துள்ளேன்.
சவுதியில் நிரந்தரமாக தங்க முடிவு
இங்கு வாழ்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதனால், சவுதி அரேபியாவில் எங்கள் வாழ்க்கையை நீண்ட காலத்திற்கு கட்டமைக்க முடிவு செய்துள்ளோம்,” என்று 40 வயதான ரொனால்டோ தெரிவித்தார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணியை விட்டு வெளியேறிய பின்னர், ரொனால்டோ அல் நஸ்ர் அணியில் இணைந்தார். சமீபத்தில், 2027 வரை தனது ஒப்பந்தத்தை நீடித்து, கிளப் மற்றும் நாட்டிற்கு தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.
வரலாற்றில் மிக அழகான நிகழ்வு
தற்போது அமெரிக்காவில் நடைபெறும் FIFA கிளப் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அழைப்பை ஓய்வு மற்றும் தயாரிப்பிற்காக மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார். அல் நஸ்ர் அணிக்கு முக்கிய பட்டம் வென்று கொடுப்பது மற்றும் சவுதி புரோ லீக்கை உலகின் முதல் ஐந்து கால்பந்து லீக்குகளில் ஒன்றாக உயர்த்துவது அவரது இலக்கு.
2034 FIFA உலகக் கோப்பையை சவுதி அரேபியா இணைந்து நடத்துவது குறித்து உற்சாகம் தெரிவித்த ரொனால்டோ, இதை “வரலாற்றில் மிக அழகான நிகழ்வு” என வர்ணித்தார். மேலும், உள்ளூர் மக்களின் கனிவு மற்றும் விருந்தோம்பலுக்கு பாராட்டு தெரிவித்து, சவுதி அரேபியாவை தனது நிரந்தர இல்லமாக்க விரும்புவதாக கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
