இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது ஈரான் இராணுவம்
Iran
Iran-Israel Cold War
Drones
By Jaso
ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள கெஷ்ம் தீவுக்கு மேல் பறந்த இஸ்ரேலிய ஆர்பிட்டர் ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை(30) ஈரானிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிகாலைவேளை கெஷ்ம் மீது பறந்த அந்த ட்ரோனை வான் பாதுகாப்புப் படை இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது.
போர்நிறுத்தவேளை நடந்த சம்பவம்
ஏப்ரல் 8 அன்று ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும், இந்த இலகுரக ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

image credit -irna news
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்ததைத் தொடர்ந்து, 40 நாட்களாகத் தொடர்ந்த கடுமையான தாக்குதல்களை அடுத்து இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்