அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு ஈரான் தாக்குதல் எச்சரிக்கை
மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் பல்கலைக்கழகங்களுக்கு ஐ.ஆர்.ஜி.சி நேரடி அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
இந்த நிறுவனங்களிலிருந்து குறைந்தது 1 கி.மீ. தொலைவில் இருக்குமாறு ஊழியர்களையும் மாணவர்களையும் புரட்சிகரக் காவலர் எச்சரித்துள்ளது.
சமீபத்திய தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்க அமெரிக்காவுக்கு திங்கட்கிழமை(இன்று) வரை ஈரான் காலக்கெடு விதித்துள்ளது.
ஐ.ஆர்.ஜி.சியின் கருத்து
இல்லையெனில், அந்த இடங்கள் குறிவைக்கப்படும் என்றும் ஐ.ஆர்.ஜி.சி கூறியுள்ளது.

இந்த அச்சுறுத்தல் பரந்த போர் எச்சரிக்கையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
IRGC முன்பு அமெரிக்க படைத்தளங்கள் அருகில் உள்ள பொதுமக்களை விலகி இருக்குமாறு எச்சரித்தது.
மத்தியகிழக்கின் சில நாடுகளில் அமெரிக்க தொடர்புடைய தொழில்கள், ஹோட்டல்கள், எரிசக்தி வசதிகளை குறிவைக்கும் என்று அறிவித்தது. அமெரிக்க நிறுவனங்களின் ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு கோரியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |