ஈரானிலிருந்து இஸ்ரேல் நோக்கி புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்!
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேல் நோக்கி மீண்டும் புதிய அலை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இது ‘ஒபரேஷன் ட்ரூ ப்ரோமிஸ் 4’ என்ற பெயரில் நடத்தப்படும் தொடர் பதிலடித் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.
இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவம் (IDF) இந்த ஏவுகணை அலையை உறுதிப்படுத்தியுள்ளது.
பல அலை தாக்குதல்
ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கும் தகவலின்படி,

இஸ்ரேலின் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து பல அலைகளாக (75வது, 76வது, 77வது உட்பட) ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
சில ஏவுகணைகளில் cluster வெடிமருந்துகள் (cluster warheads) பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் Iron Dome, David’s Sling போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளன.
Dimona அணு ஆராய்ச்சி மையம்
எனினும், சில ஏவுகணைகளின் துண்டுகள் தெற்கு இஸ்ரேலில் விழுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் Dimona அணு ஆராய்ச்சி மையம் அருகில் அனேகமானோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் இந்தத் தாக்குதலை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தனது அணு மற்றும் எரிசக்தி தளங்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக நடத்துவதாகக் கூறுகிறது.
IRGC அறிக்கையில், “இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தளங்கள் முழுமையாக கண்காணிப்பில் உள்ளன” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |