ஒரு வைத்தியசாலையின் பெயர் பலகையை மாற்றுவதால் வைத்தியசாலை அபிவிருத்தியடையுமா...!

Jaffna Ministry of Health Sri Lanka Ramalingam Chandrasekar
By Theepan Jul 01, 2026 07:49 AM GMT
Report

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்ததான , புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவ படுத்தும், அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர், ஏனைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஆனால் , வைத்தியசாலையை மத்திய அரசுக்கு தாரை வார்த்து கொடுக்காமல் , மாகாண அமைச்சின் கீழேயே வைத்திய சாலை இயங்க வேண்டும்.

அதற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டாமல் அல்லது மத்திக்கு தந்தால் தான் அபிவிருத்தி செய்வேன் எனவும் வைத்தியசாலையை ஒதுக்காது அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தமிழரசு கட்சி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஈழமக்கள் ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் தெல்லிப்பழை வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…

சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…

மாகாண சபை அதிகாரங்கள்

மாகாண சபைகளுக்கு என ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை அபிவிருத்தி எனும் பெயரில் மத்திய அரசாங்கம் மீண்டும் பறித்துக்கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவும் கடந்த காலங்களில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வோம் , உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தி தருவோம் என பொய்யான வாக்குறுதிகளை கூறி மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என மத்திக்குள் உள்வாங்கி இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி எனும் பெயரில் மாகாணத்திடம் இருந்து பறிக்க முயல்கின்றனர் என்ற குற்றச்ச்சாட்டை முன் வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மத்தியின் கீழ இயங்கும் வடக்கில் உள்ள போதனா வைத்தியசாலை ஆகும்.

அங்கு சகல வசதிகளும் , உள்ளனவா ? வைத்தியர் வெற்றிடங்கள் , தாதியர்கள் வெற்றிடங்கள் , போதிய உட்கட்டுமான வசதிகளும் காணப்படுகிறனறனவா ?

மத்தியின் கீழ் தெல்லிப்பழை வைத்தியசாலை சென்றால் அபிவிருத்தி அடையும் என சொல்லுபவர்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துளளார்.

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை

இவ்வாறான நிலையில் , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்தியின் ஆளுகைக்கு கீழ் கொண்டு செல்ல வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினரான ச. சிறிபவானந்தராசா கடுமையான நிலைப்பாட்டில் உள்ளார். அதனால் அவரது தலைமையில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வைத்திய சாலையை மத்தியிடம் கையளிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்ற முனைப்பு காட்டினார்.

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். அதன் போது வைத்தியசாலையை மத்தியிடம் கையளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் கஜேந்திரகுமாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் , சபை நாகரிகம் அன்றி தன்னிலை மறந்து ஒருமையிலும் விளித்து தர்க்கப்பட்டனர். அவ்வாறான கடுமையான கருத்து முரண்பாடு ஏற்பட்டு , சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட போதிலும் , பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினரான ச. சிறிபவானந்தராசா வைத்திய சாலையை மத்தியிடம் கையளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டார்.

அதனை அடுத்து மறுநாள் 19ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அதன் போதும் தெல்லிப்பழை வைத்தியசாலையை மத்தியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது கடுமையான எதிர்ப்பினை, கஜேந்திரகுமார் உள்ளிட்ட தரப்பு முன் வைத்தது.

இருந்த போதிலும் , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் வைத்தியசாலையை மத்திக்கு கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான நிலையில், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்து , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு நேரில் சென்று , வைத்தியசாலை உட்கட்டுமான வசதிகளை பார்வையிட்டதுடன் , வைத்தியர் குழாம் , வைத்திய சாலை நலன்புரி சங்கத்தினர் உள்ளிட்டவர்களுடன் விசேட கலந்துரையாடலை நடாத்தினர்.

செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்…

செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்…

அமைச்சில் இருந்து ஒரு குழு

அதில் குறிப்பாக தெல்லிப்பழை வைத்தியசாலையை மத்தியின் கீழ் கொண்டு செல்வது தொடர்பில் கலந்துரையிடப்பட்ட போது, சுகாதார அமைச்சர் தனக்கு மூன்று தெரிவுகள் உள்ளதாகவும், முதலாவது, இந்த வைத்தியசாலையை வட மாகாண சபையின் கீழேயே தொடர்ந்து வைத்திருப்பது.

அதேநேரம், அதற்குத் தேவையான நிதி, புதிய உபகரணங்கள், கட்டிடங்கள் மற்றும் பணியாளர்களை மத்திய அரசு மூலமாக வழங்குவது. இரண்டாவது, பலரும் கூறுவது புற்றுநோய் பிரிவை மட்டும் ஒரு விசேட பிரிவாக (Specialized Unit) மத்திய அரசு (Line Ministry) பொறுப்பேற்பது.

மூன்றாவது முழு வைத்தியசாலையையும் மத்திய அமைச்சின் கீழ் கொண்டு வருவது. இதில் முதலாவது விடயத்தில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது என நினைக்கிறேன்.

எனவே, இது தொடர்பாக ஆராய அமைச்சில் இருந்து ஒரு குழுவை நியமிப்பது சிறந்தது என நினைக்கிறேன். பல தரப்பினரிடம் இருந்து மேலும் பல தகவல்களை நாங்கள் திரட்டுவோம்.

ஏனெனில், மத்திய அரசு பொறுப்பேற்பது என்பது சேவைகளை இன்னும் சிறப்பாகப் பேணுவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். வெறும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதாலோ அல்லது அமைச்சரவை ஒப்புதலைப் பெறுவதாலோ மட்டும் சேவைகளை மேம்படுத்திவிட முடியாது.

தற்போதைய சூழ்நிலையில், இந்த வைத்தியசாலையை உடனடியாக ஒரு மாவட்ட பொது வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!

இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!

மூன்று மாடி கட்டடம்

ஏனெனில், ஒரு ஆதார வைத்தியசாலைக்கும் (Base Hospital) மாவட்ட பொது வைத்தியசாலைக்கும் (DGH) இடையே உள்ள கட்டமைப்பு ரீதியான இடைவெளி மிகப்பெரியது. அரசியல் காரணங்களுக்காக நான் இதன் பெயர் பலகையை 'DGH' என்று மாற்றிவிட முடியும், ஆனால் அதன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் பெயர் மாற்றுவது எங்களது வழக்கமும் அல்ல, நோக்கமும் அல்ல என தெரிவித்து இருந்தார்.

அதேவேளை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டடம் ஒன்றினை அமைக்கும் பணிகளுக்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றின் பணிகளை துரித கெதியில் முன்னெடுத்து , 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் அந்த கட்டடத்தை கையளிக்க எதிர்பார்க்கின்றோம். அந்த கட்டடம் கையளிக்கப்படும் போது வைத்தியசாலைக்கு தேவையான ஆளணிகளை நிரப்பவும் , தேவையான நவீன மருத்துவ உபகரணங்களையும் கையளிப்ப்போம் எனவும் சுகாதார அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

தெல்லிப்பழை வைத்தியசாலை உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டு , யுத்தம் முடிவடைந்த பின்னர் 2011ஆம் ஆண்டு கால பகுதியிலையே மீள ஆரம்பிக்கப்பட்டது.

தற்போதும் வலி. வடக்கு மீள்குடியேற்ற மக்களுக்கான ஒரு ஆதார வைத்தியசாலையாக ,பல்வேறு வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. எனவே அன்றைய கலந்துரையாடலில் "சுகாதார சேவை என்பது அரசியல் மேடையல்ல, அது மக்களின் உயிரைக் காக்கும் சேவையாகும்.

எனவே அரசியல் வேறுபாடுகளை விடுத்து, தெல்லிப்பழை வைத்தியசாலையின் அபிவிருத்திக்கும் மக்களின் நலனுக்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் " என கடற்தொழில் அமைச்சர் கூறியது போன்று , வைத்திய சாலையை வைத்து அரசியல் செய்வதனை அனைத்து தரப்பினரும் நிறுத்தி , வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.

15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய

15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepan அவரால் எழுதப்பட்டு, 01 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026