15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய

CID - Sri Lanka Police Gotabaya Rajapaksa High Court of Sri Lanka
By Dharu Jun 20, 2026 06:04 AM GMT
Report

பொது நிதியை செலவழித்து தனது பெற்றோரின் கல்லறை நினைவுச் சின்னங்களை அமைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 2016 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் நீதிமன்ற விசாரணைகளில் இருந்து தவிர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிதி முறைகேடு, அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

ஒரு அரசின் உயர் அடுக்கில் உள்ள ஒருவர்15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்தார் என்ற தகவல், அது ஜனநாயகத்தில் மற்றும் சட்டத்தின் முன்னிலையில் சமத்துவம் (rule of law) குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பகூடிய ஒன்று.

தமிழர்களின் கண்ணீருக்கு பதில் தேடும் PTA- அதிகாரத்தின் ஆயுதம்! காலம் கடந்து குறிவைக்கப்படும் கோட்டாபய

தமிழர்களின் கண்ணீருக்கு பதில் தேடும் PTA- அதிகாரத்தின் ஆயுதம்! காலம் கடந்து குறிவைக்கப்படும் கோட்டாபய

D. A. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகம்

எந்தவொரு சாதாரண நபருக்கும் நீதிமன்ற அழைப்பை மீறுவது அனுமதிக்கப்படாத ஒன்று என்பதால், உயர்நிலை அரசியல் பதவியில் இருந்தவர்களுக்கும் அதே அளவிலான பொறுப்பு இருக்க வேண்டும்.

15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய | Gotabaya Has Evaded Court Appearances 15 Times

இந்த விவகாரம் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விசாரணை விவரங்கள் அப்போது ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தந்தையான D. A.  ராஜபக்சவின் 47ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, 2014 நவம்பர் 6ஆம் திகதி வீரகெட்டியவில் அவரது பெயரில் ஒரு நினைவு அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக அன்றைய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்ட நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சுமார் 33.9 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசு வளங்களை பயன்படுத்தி டி. ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டது “ஒழுங்குமுறை மீறிய செயற்பாடு” என 2014ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அந்த விடயம் தொடர்பாக 2018 பிப்ரவரி 6ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கையில் தணிக்கையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும், அருங்காட்சியகம் D. A. டி.ஏ. ராஜபக்ச அறக்கட்டளை மற்றும் நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கிடையில் சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டதாகவும், இது ஒரு சிவில் பரிவர்த்தனை மட்டுமே எனவும் கூறி, கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்து வாதிட்டனர்.

இந்த வழக்கில் கோட்டாபய ராஜபக்ச உடன் , நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்ஷனா டி சில்வா மற்றும் கூட்டுத்தாபனத்தின் இயக்குனர்கள் குழு உறுப்பினர்களான பத்ராவதி கமலாதாச, சுதம்மிகா அதிகல, சமன் குமார கலப்பட்டி, டி மெண்டிஸ் சலியா மற்றும் மல்லிகா குமாரி சேனாதீர ஆகியோரும் இவ்வழக்கில் மற்ற பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச

விடுக்கப்பட்ட கோரிக்கை - பதில் 

2015 ஒகஸ்ட் 28

இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், ராஜபக்ச நினைவு கல்வி, கலாசார மற்றும் சமூக சேவை அறக்கட்டளை அமைப்பின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, தங்களது நிறுவனத்துக்குச் செலுத்தப்பட வேண்டிய சுமார் 81.3 மில்லியன் ரூபாய் தொகையை வழங்குமாறு கோரியது.

15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய | Gotabaya Has Evaded Court Appearances 15 Times

2015 செப்டம்பர் 14

இதற்கு பதிலளித்த ராஜபக்ச நினைவு கல்வி, கலாசார மற்றும் சமூக சேவை அறக்கட்டளை, தாங்கள் செலுத்த ஒப்புக்கொண்ட தொகை சுமார் 27.5 மில்லியன் ரூபாய் மட்டுமே என அறிவித்தது.

2016 ஜூன் 1

இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்திக் கழகத்திற்கு 56.3 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு, ராஜபக்ச நினைவு கல்வி, கலாசார மற்றும் சமூக சேவை அறக்கட்டளைக்கு உத்தியோகபூர்வ கோரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டது.

2017 ஜூலை 17

அரசின் பிரதம மதிப்பீட்டாளர், சம்பந்தப்பட்ட அருங்காட்சியகம் மற்றும் நினைவுச் சின்னத்தின் கட்டுமானப் பணிகளின் மொத்த மதிப்பு சுமார் 33.8 மில்லியன் ரூபாய் என மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.

2017 நவம்பர் 29

கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக பொது சொத்துகள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதை டிசம்பர் 6 ஆம் திகதி வரை இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை விதித்தது.

இந்த சம்பவங்கள், டி. ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகத்தின் நிர்மாணம், அதற்கான செலவினங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள நிதி மற்றும் சட்ட விவகாரங்களின் காலவரிசைப் பதிவாகும்.

துறவறம் பூணுகிறார் கோட்டாபயராஜபக்ச...!

துறவறம் பூணுகிறார் கோட்டாபயராஜபக்ச...!

தொடர்பான விசாரணை

2017 டிசம்பர் 16

டி. ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்திக் கழகத்தின் நிதி பயன்படுத்தப்பட்டபோது, அந்தக் கழகத்துடன் எந்தவொரு வாய்மொழி அல்லது எழுத்துமூல ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றின் முன் அறிவித்தார்.

15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய | Gotabaya Has Evaded Court Appearances 15 Times

மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே, சம்பந்தப்பட்ட அறக்கட்டளை, இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்திக் கழகத்திடமிருந்து பெற்றிருந்த நிதியின் ஒரு பகுதியை மீளச் செலுத்த நடவடிக்கை எடுத்ததாகவும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த கட்டுமானப் பணிகளுக்காக கடற்படை வீரர்கள் பயன்படுத்தப்பட்டமை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தொலைபேசி மூலம் கடற்படைத் தளபதிக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் நிறுவனத்தால் மெதமுலனையில் அமைக்கப்பட்ட டி. ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகம் மற்றும் நினைவுச் சின்னத்தின் நிர்மாணம் தொடர்பாக, கணக்காய்வாளர் நாயகம் ஒரு சிறப்பு அறிக்கையை சமர்ப்பித்தார்.

கோட்டாபய ராஜபக்சவின் கைது தொடர்பில் கசிந்த தகவல்

கோட்டாபய ராஜபக்சவின் கைது தொடர்பில் கசிந்த தகவல்

 அறிக்கையின் முடிவுகள் 

அந்த அறிக்கையில் பின்வரும் முடிவுகள் முன்வைக்கப்பட்டன:

1. நிதி வழங்குதல் அல்லது நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக எந்தவொரு எழுத்துமூல அல்லது வாய்மொழி ஒப்பந்தமும் இல்லாமல் அரசுப் பணம் செலவழிக்கப்பட்டு, அந்தச் செலவுகள் நிறுவனத்தின் நிதி அறிக்கைகளில் அரசுச் செலவாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. இத்தகைய நடவடிக்கை, 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துகள் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு முரணானதாகும் என அறிக்கை குறிப்பிட்டது.

2.அரச அதிகாரிகளின் தேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், அரசின் வளங்கள் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தால், அது அரசுச் சொத்துக்களின் தவறான பயன்பாடாகக் கருதப்பட வேண்டும். இதனால் அரசிற்கு கிடைக்க வேண்டிய அனைத்து பெறுமதிகளும் சட்டப்படி மீட்டெடுக்கப்பட வேண்டுமா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய | Gotabaya Has Evaded Court Appearances 15 Times

3. எதிர்காலத்தில் அரசின் வளங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதை முழுமையாகத் தடுக்க, இந்த ஒழுங்கற்ற செயல்முறையில் ஈடுபட்ட அல்லது அதற்கு ஆதரவளித்த அனைத்து அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.

4.தனிப்பட்ட நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக இலங்கை கடற்படையின் மனிதவள பங்களிப்பை வழங்க தீர்மானித்த அதிகாரிகளுக்கு அதற்கான சட்டபூர்வ அதிகாரம் இருந்ததா என்பதைப் பற்றியும் மேலதிக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அறிக்கை வலியுறுத்தியது.

5.மேலும், இலங்கை நாட்டின் நிதி ஒழுங்குவிதிகள் தொகுப்பின் 124ஆம் ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமல், நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் நிதி ஒழுக்கத்தை பாதித்துள்ளதாகவும், இந்த ஒழுங்கற்ற செயல்முறைக்கு பொறுப்பான தரப்பினரிடமிருந்து சம்பவம் தொடர்பாக பாராளுமன்றம் விளக்கம் கோர வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

2018 ஜூன் 14

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதைத் தடுக்க ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க மேன்முறையீட்டு  நீதியரசர்கள்  தீர்மானித்தனர்.

அன்று காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2018 ஜூன் 25 ஆம் திகதி நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு முன் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு அறிவித்தது.

2018 ஜூன் 25

2018 ஜூன் 14 அன்று நீதிமன்றம் வழங்கிய அறிவிப்பின்படி, அரசுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கோட்டாபய ராஜபக்ச, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு நெருக்கமான காலம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் வெளியேறினார்.

2018 ஜூலை 20

தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் 2018 செப்டம்பர் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தது, கொழும்பு நீதவான் நீதிமன்றம்,  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசாத் ஹர்ஷன டி சில்வா மற்றும் அந்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான பத்ராவதி கமலாதாச, சுதம்மிகா அடிகல, சமன் குமார டி.எம். ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியது.

அன்றைய விசாரணையின் போது, குற்றச்சாட்டுகள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அறிக்கைகள் அனைத்தும் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்தது.

2018 ஒகஸ்ட் 24

கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக, இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் Trial-at-Bar முன் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது.

இது, அவர்கள் 2018 செப்டம்பர் 7 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் இடம்பெற்றது.

2018 ஒகஸ்ட் 27

கோட்டாபய உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளும் 2018 செப்டம்பர் 12 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று அறிவித்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் Trial-at-Bar அழைப்பாணை (சம்மன்) பிறப்பித்தது.

2018 செப்டம்பர் 07

டி. ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியக கட்டுமானம் தொடர்பாக, கோட்டாபய உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் Trial-at-Bar முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தனது நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை முடித்து வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2018 செப்டம்பர் 10

நீதிமன்றம் வழங்கிய சம்மனின் அடிப்படையில் கோட்டாபய உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் Trial-at-Bar முன்னிலையில் முன்னிலையாகினர். அங்கு, ஒவ்வொரு பிரதிவாதிக்கும் 100,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 1 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரண்டு சரீர பிணை (surety) அடிப்படையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அவர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், அவர்களின் கடவுச்சீட்டுக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2018 ஒக்டோபர் 19

தாம் கோரிய அனைத்து ஆவணங்களும் வழக்குத் தரப்பால் வழங்கப்படவில்லை என பிரதிவாதி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதை பரிசீலிக்க மேல் நீதிமன்றத்தின் Trial-at-Bar வழக்கை மீண்டும் 2018 நவம்பர் 9 அன்று விசாரிக்க தீர்மானித்தது.

2018 நவம்பர் 09

சுமார் 34 மில்லியன் ரூபாய் அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோட்டாபய, 2018 டிசம்பர் 14 முதல் ஒரு மாத காலத்திற்கு வெளிநாடு செல்ல அனுமதி பெற்றார் என்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் Trial-at-Bar உத்தரவிட்டது.

அதே நேரத்தில், வழக்கிற்குத் தேவையான சில ஆவணங்கள் இன்னும் வழக்குத் தரப்பால் வழங்கப்படவில்லை என அவரது சட்டத்தரணி அலிசப்ரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு பதிலாக, அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், நடைமுறையில் வழங்கக்கூடிய அனைத்து ஆவணங்களும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து, ஆவணங்கள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க வழக்கை மீண்டும் 2018 நவம்பர் 27 அன்று விசாரிக்க நீதிமன்றம் தீர்மானித்தது.

முதல் விசாரணை

2019 ஜனவரி 17

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் Trial-at-Bar , இந்த வழக்கை 2019 ஜனவரி 22 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டது. அரசுத் துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு தொடர்புடைய 15 சாட்சியர்களில் சிலர் விசாரணை தொடங்கும் காலத்தில் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், அது நடந்தால் வழக்கு முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்றும் கூறினார்.

15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய | Gotabaya Has Evaded Court Appearances 15 Times

இதையடுத்து, விசாரணை காலத்தில் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால் நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என சாட்சியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

2019 ஜனவரி 22

இந்த வழக்கை விசாரிக்க தமக்கு சட்ட அதிகாரம் இல்லை என பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் ஆரம்பக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதையடுத்து, அரசுத் தரப்புக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கி, வழக்கை 2019 ஜனவரி 31 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் தீர்மானித்தது.

அதே நேரத்தில், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் திறந்த அமர்வில் வாசிக்கப்பட்டன. சாட்சியர்களின் பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் உத்தரவுகள் வழங்க வேண்டும் என திலீப பீரிஸ் கோரினார்.

அவர் நீதிமன்றத்தில் கூறியதாவது: “நீதிமன்ற அறைக்குள் சாட்சியர்கள் நுழைய ஒரே ஒரு கதவுதான் உள்ளது. அந்த கதவின் அருகிலும், விசாரணைக் கூண்டின் அருகிலும் தனியார் பாதுகாப்பாளர்கள் உள்ளனர்.

அவர்கள் சாட்சியர்கள் அல்லது புகாராளரின் பாதுகாப்புக்காக இல்லை.” இதற்குப் பதிலாக, அடுத்த விசாரணை நாளில் இது குறித்து உரிய உத்தரவு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

2019 ஜனவரி 25

2019 ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், மூன்று சாட்சியர்கள் உத்தியோகபூர்வ காரணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதே நாளில், விசாரணையின் போது சாட்சியராக இருந்த புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகத்தின் தலைவர் டபிள்யூ. எம். ஏ. இட்டாவெல, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவுக்கு நீதிமன்றத்தில் கை கொடுத்து மரியாதை செலுத்தியதாகக் கூறப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தது.

இது தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, தாம் அந்த செயலுக்கு மன்னிப்பு கோருவதாக டபிள்யூ. எம். ஏ. இட்டாவெல நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணைக்கு வருகிறது கோட்டாபயவின் மனு! சூடுபிடிக்கும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்

விசாரணைக்கு வருகிறது கோட்டாபயவின் மனு! சூடுபிடிக்கும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026