மோடியின் பதிவை நீக்கிய மெட்டா நிறுவனம்!

Facebook Narendra Modi Meta
By Dharu Aug 06, 2026 09:40 AM GMT
Report

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகப் பதிவை தவறுதலாக நீக்கிய விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இது குறித்து மெட்டா (Meta) நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முதன்மை அதிகாரி ஜோயல் கப்லான் (Joel Kaplan), இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (META.O), புதுப்பிப்பானது பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு பதிவை ஜூலை 23 அன்று மாதம் சிறிது நேரம் கட்டுப்படுத்தியதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனத்தின்  தலைவர் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணி! மோடியை மன்னிப்பு கோர வலியுறுத்து

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணி! மோடியை மன்னிப்பு கோர வலியுறுத்து

நீண்ட கலந்துரையாடல்

அன்றைய தினம் பிரதமர் மோடி வெளியிட்ட காணொளி  பதிவு ஒன்று, மெட்டாவுக்குச் சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இருந்து சிறிது நேரம் நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

மோடியின் பதிவை நீக்கிய மெட்டா நிறுவனம்! | Meta Company Removes Modi S Post

இச்சம்பவம் ஒரு ‘தொழில்நுட்பக் கோளாறு’ (Technical glitch) காரணமாகவே ஏற்பட்டது என்றும், தவறுதலாகவே இப்பதிவு நீக்கப்பட்டதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.

மெட்டா உயர் அதிகாரி ஜோயல் கப்லான், இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளரையும் ஏனைய உயர் அதிகாரிகளையும் சந்தித்து 45 நிமிடங்கள் கலந்துரையாடியதுடன், இத்தவறுக்காக முறைப்படி மன்னிப்பும் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் மெட்டா அளித்த இந்த விளக்கத்தைப் போதியதாக இல்லை (inadequate) என இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) நிராகரித்துள்ளது.

போராட்டத்தால் திணறும் டெல்லி - நள்ளிரவில் மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ

போராட்டத்தால் திணறும் டெல்லி - நள்ளிரவில் மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ

3 நாட்களுக்குள் மன்னிப்பு

இந்நிலையில் பிரதமரின் காணொளியை நீக்கியமை ஒரு இடைத்தரகர் தளத்தின் செயல் அல்ல, அது ஒரு பதிப்பகத்தின் (Publisher) செயல் எனக் குறிப்பிட்ட இந்திய நாடாளுமன்ற  தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் நிஷிகாந்த் துபே, மெட்டா தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மோடியின் பதிவை நீக்கிய மெட்டா நிறுவனம்! | Meta Company Removes Modi S Post

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியா கண்டிராத மிகப்பெரிய இளைஞர் தலைமையிலான போராட்ட அலையை மோடி சமாளித்துக் கொண்டிருந்த வேளையில், அந்தக் காணொளிகள் பரவின.

தேசியத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததன் காரணமாக அவரது கல்வி அமைச்சர் பதவி விலகல் செய்ததால், அந்தப் போராட்டங்கள் வெடித்தன.

பிரதமர் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து மெட்டாவுக்கும் மோடி அரசுக்கும் இடையே சமீபகாலமாக நிலவி வரும் பதட்டங்களின் ஒரு பகுதியாக இந்தச் சம்பவங்கள் அமைந்துள்ளன. 

இந்திய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

இந்திய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்