இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணி! மோடியை மன்னிப்பு கோர வலியுறுத்து

Narendra Modi India
By Dharu Aug 01, 2026 08:53 PM GMT
Report

கடந்த ஜூலை 20 அன்று இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணியில் கலந்துகொண்டதற்காக 12 வயது சிறுமிகள் மீது அந்நாட்டு காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோரியாக வேண்டும் என சி.ஜே.பி நிறுவனர் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் செல்பி காணொளி ஒன்றை வெளியிட்டார்.

அதில், "எனக்கு எதிராகவும், எனது மறைந்த தாயாருக்கு எதிராகவும் எழுப்பப்பட்ட அவதூறு முழக்கங்கள் என்னை ஆழமாகப் காயப்படுத்தின. இருப்பினும், தவறு செய்யும் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தண்டனையைத் தேடாமல், அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களைச் சரியான பாதையில் வழிகாட்டவும் சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். நான் அந்த மாணவர்களை மன்னிக்கிறேன்," என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

போராட்டத்தால் அதிரும் டெல்லி....! மத்திய கல்விச் செயலாளர் பணியிட மாற்றம்

போராட்டத்தால் அதிரும் டெல்லி....! மத்திய கல்விச் செயலாளர் பணியிட மாற்றம்

தாக்கப்பட்ட பெண்

இந்நிலையில் தன்னை இழிவாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக மோடி நேற்று முன்தினம் இரவு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செல்பி காணொளியை விமர்சித்து நேற்று தீப்கே எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணி! மோடியை மன்னிப்பு கோர வலியுறுத்து | India Rally Demanding An Apology From Modi

அதில் கருத்து தெரிவித்த அவர், "நேற்று மோடி ஜி ஒரு காணொளியில் சிறுவர்களை மன்னிப்பதாக கூறியிருந்தார் . இன்றிரவு அவர் மீண்டும் ஒரு காணொளி வெளியிட்டு, ஜூலை 20 மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன்.

12 வயது சிறுமிகளின் தலையில் காவல்துறை தாக்கியது. பெண்களின் ஆடைகள் கிழிக்கப்ட்டன. எனவே மோடி, காவல்துறையால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மாணவர்களை மன்னித்துவிடுவதாக அவர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "பெற்றோர் தனது பிள்ளையின் மறைவினால் படும் துக்கத்தை விட பெரிய வலி வேறேதுமில்லை. தங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரை பறிகொடுத்த வலி அவர்களை விட்டு என்றும் நீங்காது. அதோடு சிதைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்வியும் அவர்களை விட்டு நீங்காதிருக்கிறது” என கூறியுள்ளார்.

இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி நியமனம்!

இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி நியமனம்!

ஈரானிடமிருந்து குவைத்தை பாதுகாக்க முடியாமல் திணறும் அமெரிக்கா

ஈரானிடமிருந்து குவைத்தை பாதுகாக்க முடியாமல் திணறும் அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026