சஜித்துடன் உரையாடிய மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளனர்.
சாதி, மத பேதமின்றி சிவராசா அனோஜனின் விடுதலைக்காக செய்யக்கூடிய உட்சபட்ச அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என சஜித் பிரேமதாச பெற்றோரிடம் உறுதியளித்தார்.
இதன்போது, சவூதி சிறையில் இருக்கும் சிவராசா அனோஜனுடன் எதிர்க்கட்சித் தலைவர் தொலைபேசி வழியாக பேசி அவரிடம் விடயங்களை கேட்டறிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
அனோஜனின் விடுதலை
பின்னர் நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

எந்தத் தரப்பிலிருந்தாவது சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவருக்கு விடுதலை கிடைக்கும் வரை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இதற்காகக் குரல் கொடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சிவராசா அனோஜனுக்கு ஏற்பட்ட இந்தத் தவறுக்காக வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு நிவாரணம் வழங்கி, முழுமையான விடுதலையைப் பெற்றுக் கொடுக்குமாறு சவூதி அரேபியாவின் மன்னரிடம் கனிவாகவும், கௌரவமாகவும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இச்சந்தப்பில், சிவராசா அனோஜனின் தந்தையரான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |