டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் சிறிய மாற்றம்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (21) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
செலான் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336.00 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
NDB வங்கியில் கொள்வனவு விலை 327.00 ரூபாயிலிருந்து 326.50 ரூபாயாகவும், விற்பனை விலை 336.00 ரூபாயிலிருந்து 335.50 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
டொலருக்கு மாற்றம்
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 326.92 ரூபாயாகவும், விற்பனை விலை 335.03 ரூபாயாகவும் மாற்றமின்றி உள்ளது.

கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 324.09 ரூபாயிலிருந்து 325.09 ரூபாயாகவும், விற்பனை விலை 334.00 ரூபாயிலிருந்து 335.00 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில் கொள்வனவு விலை 326.50 ரூபாயிலிருந்து 327.25 ரூபாயாகவும், விற்பனை விலை 334.25 ரூபாயிலிருந்து 335.25 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இதன்படி, இன்று சில வங்கிகளில் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளில் சிறிய ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதுடன், சில வங்கிகளில் மாற்றமின்றி காணப்படுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |