பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி கைது
சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரியும் சமூக செயற்பாட்டாளருமான அலீமா கான் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாகூர் துணை ஆணையரின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர், 30 நாட்களுக்கு கோட் லக்பத் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஊடாக மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் தூண்டியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(PTI) எதிர்ப்பு
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி PTI எதிர்வரும் 27ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் போராட்டப் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அலீமா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் 2023ஆம் ஆண்டு முதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |