ஈரான் நிச்சயமாக முறியடிக்கும்! அமெரிக்காவுக்கு முக்கிய புள்ளி எச்சரிக்கை
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை ஈரான் நிச்சயமாக முறியடிக்கும் என்று ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய இராணுவ மோதல்களின் தீவிரத்திற்கு இந்த கடல்சார் கட்டுப்பாடுகளும் ஒரு முக்கிய காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்போது, ஒரு போர்க்குற்றமாகவும் எதிரியின் சதியின் ஒரு பகுதியாகவும் விளங்கும் இந்த கடற்படை முற்றுகையை, தங்களின் விரிவான திட்டமிடல் மூலம் அமெரிக்காவிற்கு மற்றுமொரு தோல்வியாக மாற்றுவோம் என்று காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார்.
அமைதி ஒப்பந்தம்
இந்த நிலையில், போரிடும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இறுதி அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, கடந்த ஏப்ரல் மாதம் விதிக்கப்பட்ட இந்த அமெரிக்க முற்றுகை முழு வீச்சில் தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இராணுவத் தாக்குதல்களை நடத்துவதை விட, இந்த முற்றுகை நடவடிக்கை ஈரான் மீது அமெரிக்காவுக்க அதிக செல்வாக்கையும் அழுத்தத்தையும் கொடுத்துள்ளதாக ட்ரம்ப் அண்மையில் கூறியிருந்தார்.
போரும் பேச்சுவார்த்தையும்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காலிபாஃப், இந்த கட்டுப்பாடுகள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று குறிப்பிட்டதுடன், அமெரிக்கத் தரப்பின் மீது தங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என்று கூறியுள்ளார்.

Image Credit: APA
மேலும், ஈரான் தனது இலக்குகளை அடைய இராணுவ நடவடிக்கைகளையும் ராஜதந்திரத்தையும் ஒருசேர முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தேர்வு என்பது போருக்கும் பேச்சுவார்த்தைக்கும் இடையேயானது அல்ல என்றும், போரிட வேண்டிய நேரம் வரும்போது போரிடவும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் வரும்போது பேச்சுவார்த்தை நடத்தவும் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்