ஈரானிய உதவியுடன் ரஷ்யாவில் ட்ரோன் தொழிற்சாலை - கண்டுபிடித்தது அமெரிக்கா

Joe Biden Russo-Ukrainian War United States of America Iran Russia
By Beulah Jun 11, 2023 10:32 AM GMT
Report

ஈரான் உதவியுடன் ரஷ்யா ட்ரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 மொஸ்கோவின் கிழக்குப் பகுதியில் ட்ரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது உக்ரைன் -ரஷ்யா இரு தரப்பிலும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற போக்கினை அவதானிக்க முடியும்.

ஜோ பைடன் ஏற்கனவே வெளியிட்ட தகவல்

ஈரானிய உதவியுடன் ரஷ்யாவில் ட்ரோன் தொழிற்சாலை - கண்டுபிடித்தது அமெரிக்கா | Iran Helping Russia Build Drone Factory Us Says

அண்மையில் ரஷ்ய எல்லைப் பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இனிவரும் காலங்களில் ட்ரோன்கள், தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் என்பது இதன்மூலம் புலனாகின்றது.

உக்ரைன் போருக்காக ஈரான்- ரஷ்யா ட்ரோன் தயாரிப்பில் ஈடுபடலாம் என கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டிந்தார்.

இராணுவம் மற்றும் பொருளாதார உதவி

ஈரானிய உதவியுடன் ரஷ்யாவில் ட்ரோன் தொழிற்சாலை - கண்டுபிடித்தது அமெரிக்கா | Iran Helping Russia Build Drone Factory Us Says

இதுகுறித்து, உக்ரைன் மீதான போர் தொடங்குவதற்கு முன் ரஷ்யாவுக்கு ட்ரோன் வழங்கி வந்ததாகவும், தற்போது ட்ரோன்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்ற நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

மறுபுறம், உக்ரைனின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா முயற்சித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025