வளைகுடாவில் பங்கர் பேஸ்டர்! இலங்கையில் சலேயின் ஈஸ்டர் பேஸ்டர்!!
மத்திய கிழக்கு பிராந்தியத்தையே ஒரு கலைக்கப்பட்ட குளவிக்கூடு போல மாற்றியுள்ள ஈரானுடனான அமெரிக்க இஸ்ரேலிய போர் முதலாவது வாரத்திலேயே அமெரிக்காவுக்கு பெரும் நிதிசெலவீனத்தை ஏற்படுத்தியதை அமெரிக்க கொங்ரசுக்கு வெள்ளைமாளிகை கணக்கு காட்டப்பட்ட ஒருவார செலவீனமான 11.3 பில்லியன் டொலர் என்ற தொகை ஆதாரமாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது எவ்வாறு பல ஷாஹெட் ட்ரோன்களை ஒன்றாகப் பறக்கவைத்து மேற்குலகு வழங்கிய உக்ரைனிய வான் பாதுகாப்பை குழப்பியதோ அவ்வாறான ஒரு தந்திரமே ரஸ்ய உதவியுடன் இப்போது வளைகுடாவில் ஈரானால் பிரயோகிப்படுவதால் அதன் தாக்குதல்கள் கடந்த 2 நாட்களாக பெரு வெற்றியடைந்துள்ளன.
இப்போது வரை ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் வைத்துள்ளதால் நிலைமை கைமீறுவதற்கு முன்னர் அமெரிக்காவின் B-1 குண்டுவீச்சு விமானங்கள் தமது பதுங்குகுழி தகர்ப்பு குண்டுகளுடன் (பங்கர் - பேஸ்டர்) ஈரானிய வான்வெளிக்குள் புகுந்து ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் களஞ்சியங்கள் இருப்பதாக கருதப்படும் இலக்குகளில் இந்த பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகளை வீசப்போவதாக தெரிகிறது.
இவ்வாறான உலக நெருக்கடி பின்னணியில் அநுர அரசாங்கத்தின் எரிசக்தி கையாளல் சொதப்பத் தலைப்படும் நிலையில் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க அரசாங்கம், இந்தியா மற்றும் சீனாவுடன் பேச்சுக்களை நடத்தி வருவதான செய்திகள் வந்துள்ளன.
ஆனால் இந்த விடயத்தில் சில ஐயமான வினாக்கள் இருந்தாலும் 2019 இல் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் சிறிலங்கா புலனாய்வு துறையின் முன்னாள் தலையான சுரேஷ் சலேவுக்கு நேரடி தொடர்பு இருந்தது என்ற விடயத்தில் இப்போது ஐயங்கள் ஏதும் இல்லை.
ஏனெனில் இவை தொடர்பான சில பூதங்கள் நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விலாவாரியாக வெளிப்பட்ட பின்னணியில் இலங்கை முதல் மத்திய கிழக்கு வரையான பரபரப்பு விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |