லண்டனில் பயங்கரம் : ஈரானிய ஊடகவியலாளர் மீது கத்திகுத்து தாக்குதல்
லண்டனில் பாரசீக மொழி ஊடக அமைப்பில் பணிபுரியும் ஒரு பத்திரிகையாளர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு லண்டனில் உள்ள விம்பிள்டனில் வெள்ளிக்கிழமை(29) பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில் ஈரான் இன்டர்நஷனல் ஊடகத்தின் தொகுப்பாளரான 30 வயதுடைய பூரியா ஜெராட்டி என்ற ஊடகவியலாளரே தாக்கப்பட்டு காலில் காயம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்பு துப்பறியும் நபர்கள் விசாரணை
அவர் தனது வேலையின் காரணமாக குறிவைக்கப்பட்டார் என்ற அச்சத்தின் மத்தியில் பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்பு துப்பறியும் நபர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தகவல் தெரிந்தவர்கள்
அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானது என்று நம்பப்படவில்லை என்றும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. காவல்துறை விசாரணைக்கு உதவ முடியும் என்று நம்பும் எந்தத் தகவலும் உள்ளவர்கள் 101 ஐ அழைத்து, CAD 3834/29 Mar என்ற எண்ணை மேற்கோள் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |