அமெரிக்காவின் முக்கிய ஆயுதக் கிடங்குகளை இலக்கு வைத்து ஈரான் அதிரடி தாக்குதல்!
அமெரிக்காவுடன் தொடர்புடைய மத்தியக்கிழக்கு தளங்களில் உள்ள ஆயுதக் கிடங்குகளுடன், வான்வழி மற்றும் ஆளில்லா விமான செயல்பாட்டு உள்கட்டமைப்புகளை ஈரானின் கடுமையாக தாக்கியுள்ளது.
இந்த தாக்குதல் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் குறிவைத்ததாக ஐ.ஆர்.ஜி.சி. அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) மக்கள் தொடர்பு அலுவலகம், “உண்மையான வாக்குறுதி 4” நடவடிக்கையின் 86-வது அலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுகணை தாக்குதல்
இது, IRGC-யின் விண்வெளி மற்றும் கடற்படைகளால் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை உள்ளடக்கிய ஒரு பல-கட்டத் தாக்குதல் என விவரிக்கப்படுகிறது.
அமெரிக்க இராணுவம், இஸ்ரேல் மற்றும் கோமலா குழுவுடன் தொடர்புடைய படைகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இடங்கள், அரத், நெகேவ், டெல் அவிவ், எர்பில், அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை மற்றும் அல் தஃப்ரா உள்ளிட்ட பல பகுதிகளில் துல்லியமாகத் தாக்கப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
தாக்குதலில் புகை மண்டலங்கள், வெடிப்புகள் மற்றும் அழிக்கப்பட்ட உயர் மதிப்பு அமெரிக்க விமானங்களின் சிதைவுகளைக் காட்டும் படங்கள் வெளியிடப்பட்டிருப்பது, அப்பகுதியில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் தாக்குதல்கள் குறித்த செய்திகளை அடக்குவதற்கான முயற்சிகளைப் பலவீனப்படுத்தியுள்ளது என்றும் ஐ.ஆர்.ஜி.சி. மேலும் வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |