அமெரிக்க விமானப்படைதளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் : மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள லராக் தீவில் அமைந்துள்ள ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு, தகுந்த பதிலடி தரப்படும் என்று இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.
லராக்தீவு மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,100 கிலோ மீட்டர் தொலைவில் லராக் தீவு அமைந்துள்ளது. இந்த தீவு ஹோர்முஸ் நீரிணையின் தெற்கிலும், கெஷம் தீவின் கிழக்கிலும் அமைந்துள்ளது.

கெஷ்ம் ஆளுநரை மேற்கோள் காட்டி ஈரானிய அரசு ஊடகமான IRNA, லராக் தீவில் இரவு நேரத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்த ஈரான்
இந்த நிலையில், ஜோர்தானில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களான கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ரக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை கூறுகையில், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு வசதிகள் மற்றும் போர் விமான நிலைகளை இந்த ஏவுகணைகள் குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |