துப்பாக்கிசூடு ட்ரம்ப் அரங்கேற்றிய நாடகம்: காணொளி மூலம் கிண்டலடிக்கும் ஈரான்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று முன் தினம் இரவு வோஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் பங்கேற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்க விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என ஈரான் காணொளி வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது.
ட்ரம்ப் முடிவுகளால் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. லட்சக்கணக்கானோர் அவ்வப்போது வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ட்ரம்ப்புக்கு இருக்கும் ஆதரவு வெகுவாக குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
ட்ரம்ப் அரங்கேற்றிய கொலை முயற்சி நாடகம்
ஈரான் மீதான போர் முடிவு, பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடனான தொடர்பு குறித்த ஆவணங்கள், வரிகளால் விலைவாசி உயர்வு, குடியேற்றத்துக்கு எதிராக அடக்குமுறை ஆகியவை அவருக்கு எதிரான போக்குக்கு முக்கிய காரணமாக சுட்டப்படுகின்றன.
Wow. Iranian Lego diss track team is FAST. pic.twitter.com/ILdlraLfFq
— Malcolm Nance (@MalcolmNance) April 26, 2026
இந்த சூழலில் இதை மறைத்து நாட்டு மக்களை திசைதிருப்ப ட்ரம்ப் இந்த கொலை முயற்சி நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக ஈரானின் அந்த அனிமேஷன் காணொளி சித்தரிக்கிறது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 10 மணி நேரம் முன்