பாகிஸ்தானுக்கு அந்த தகுதியே இல்லை : ஈரான் எம்பியின் அறிவிப்பால் பரபரப்பு
அமெரிக்காவுடனான போர் நிறுத்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் தகுதி பாகிஸ்தானுக்கு கிடையாது என்று ஈரான் எம்பி ஒருவர் தெரிவித்துள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஈரான் எம்பி இப்ராஹிம் ரெசாய் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில்;
பாகிஸ்தான் ஒரு நல்ல நண்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு பொருத்தமான நாடு கிடையாது.
அமெரிக்காவின் நலன்களுடன் ஒத்துப்போகும் பாகிஸ்தான்
ஏனெனில், பாகிஸ்தான், அமெரிக்காவின் நலன்களுடன் ஒத்துப்போகும் தன்மை கொண்டது. அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சிப்பதை பாகிஸ்தான் தவிர்க்கிறது.

லெபனான் விவகாரம் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்கள் உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத இடங்களைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டது.
மத்தியஸ்தர் பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும்
ஒரு மத்தியஸ்தர் பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும். எப்போதும் ஒரு பக்கமே சாய்ந்து கொண்டிருக்கக் கூடாது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 10 மணி நேரம் முன்