அமெரிக்காவின் தடைப்பட்டியலில் உள்ளவரா புதிய ஜனாதிபதி? பரபரப்பாகும் ஈரானிய அரசியல்
ஈரானின் புதிய ஜனாதிபதியாக கடும்போக்காளர் இப்ராஹிம் ரைசி தெரிவாகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்த நிலையில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் இது வரை கிடைக்கப் பெற்ற வாக்குகளின் பிரகாரம் கடும்போக்காளரான இப்ராஹிம் ரைசி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இப்ராஹிம் ரைசி தம்முடன் போட்டியிட்ட மற்றைய மூன்று போட்டியாளர்களையும் விட முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்ராஹிம் ரைசி ஈரானின் சிறந்த நீதிபதியாவார். இவர் பழைமைவாத தீவிர சிந்தனையுடையவர். இதேவேளை பல அரசியல் கைதிகளுக்கு எதிராக தண்டைனை வழங்கியுள்ளார்.
மேலும் இவர் அமெரிக்காவின் தடைப்பட்டியலில் உள்ள நபராக காணப்படுகின்றார்.
நாட்டில் உள்ள மத தலைவர்களுக்கு அடுத்த படியாகவுள்ள பதவியாக ஜனாதிபதிப் பதவி காணப்படுகின்றது. மேலும் ஜனாதிபதி ஜனநாயகக் கொள்கை மற்றும் வெளிநாட்டு விடயங்களில் தனித்துவமான செல்வாக்கினைக் கொண்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ஹசன் ருஹானி உட்பட ஏனைய போராட்டியாளர்கள் இப்ராஹிம் ரைசிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.