உலகமே காத்திருக்கும் ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அடுத்த 24 மணிநேரத்திற்குள் அறிவிப்பு
ஈரானின் புதிய உச்சத் தலைவர் அடுத்த 24 மணிநேரத்திற்குள் தேர்வு செய்யப்படலாம் என அந்த நாட்டின் முக்கிய மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உச்சத் தலைவரை நியமிக்கும் நிபுணர்கள் சபையின் உறுப்பினரான அயத்துல்லா மொசாஃபரி அந்நாட்டு அரசு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரது கருத்துப்படி, 88 மூத்த மதகுருமார்களைக் கொண்ட நிபுணர்கள் சபை, புதிய உச்சத் தலைவரை தேர்வு செய்யும் கூட்டத்தை நடத்த தேவையான சூழ்நிலைகள் உருவாகும் தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
உறுதியான நம்பிக்கை
மேலும், “இறைவனின் அருளால் இந்த நடவடிக்கை அடுத்த 24 மணிநேரத்திற்குள் நடைபெறும் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்குள்ளது,” என மொசஃபரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய உச்சத் தலைவரை தேர்வு செய்வது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து பொதுமக்கள் ஊகங்கள் அல்லது வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 16 மணி நேரம் முன்