ஹோர்முஸ் ஜலசந்தியில் புதிய பாதுகாப்புப் பாதை! ஈரான் - ஓமான் கூட்டு முயற்சி
ஈரான், ஓமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) இதனை தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக பாதுகாப்பான பாதையொன்றை அமைப்பது குறித்து இப்பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேரடிப் பேச்சுவார்த்தை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ஓமானுடன் கலந்தாலோசித்து மிக விரைவாகத் தற்காலிகப் பாதையொன்றை தீர்மானிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்காவுடன் எந்தவித நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்பதை இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், ஈரானுக்கு எதிரான பாரிய தாக்குதலை நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |