இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த 100 குரூஸ் ஏவுகணைகள் தயார்
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள தனது தூதரக வளாகத்தின் மீது ஏப்ரல் 1 ஆம் திகதி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 100 க்கும் மேற்பட்ட குரூஸ் ஏவுகணைகளை ஈரான் தயார் செய்துள்ளது என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஏபிசி நியூஸிடம் தெரிவித்தனர்.
அத்துடன் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய கணிசமான எண்ணிக்கையிலான ட்ரோன்களை ஈரான் தயார் செய்துள்ளதாக மற்றொரு அதிகாரி கூறினார்.
ஒரு வாரமாக தயார்படுத்தும் ஈரான்
கடந்த ஒரு வாரமாக ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தயார் செய்து வருவதாக அதிகாரிகள் ஏபிசி நியூஸிடம் தெரிவித்தனர்.
பதிலடி கொடுப்பதாக ஈரானின் சபதம் காரணமாக இஸ்ரேல் உஷார் நிலையில் உள்ளது. ஈரானிய இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேல் அரிதாகவே ஒப்புக்கொள்கிறது, மேலும் டமாஸ்கஸில் நடந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சுலைமானிக்கு பின்னர் கொல்லப்பட்ட முக்கிய தளபதி
ஆனால் பென்டகன் துணை செய்தி செயலாளர் சப்ரினா சிங் ஏப்ரல் 2 மாநாட்டின் போது இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பு என்று மதிப்பிட்டார். "இஸ்ரேலியர்கள் டமாஸ்கஸில் நடத்திய தா்குதலின் நோக்கம் குறித்து எங்களுக்கு அறிவிக்கவில்லை" என்று சிங் கூறினார்.
ஈரானின் புரட்சி காவல் படையின் படையின் தலைவரான மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி ஜன. 3, 2020 அன்று ஈராக்கில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலால் கொல்லப்பட்ட பின்னர் டமாஸ்கஸில் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய இராணுவத் தளபதி ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி மிக உயர்ந்த பதவியில் இருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |