அமெரிக்காவுக்கு பேரிடி! பதிலடியை தொடங்கியது ஈரான்
அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படாமல் விடப்படாது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மிரட்டல் விடுத்துள்ளார்.
ஈரானுக்குள் அமெரிக்கா நடத்திய புதிய அலை தற்காப்புத் தாக்குதல்களுக்கு தொடர்ந்து அவரின் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து அராக்சி வெளியிட்டுள்ள புதிய பதிவில், போர்க்களத்தில் ஏற்கனவே தோல்விகளைச் சந்தித்த போதிலும், அமெரிக்கா தங்களின் உறுதியைச் சோதித்துப் பார்க்கத் துணிந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
உடன் வெளியேறுமாறு எச்சரிக்கை
தங்களின் சக்திவாய்ந்த ஆயுதப் படைகள் அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலையும் அல்லது அச்சுறுத்தலையும் வெறுமனே விடாது என்றும், அமெரிக்கப் படைகள் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பினால் உடனடியாக தங்களது பிராந்தியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Image Credit: Al Jazeera
முன்னதாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் அமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் முதற்கட்டத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுருந்தன.
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரானும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் அதிரடி பதில் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்