டீசல் கடத்திய வெளிநாட்டவர்களை கப்பலுடன் கைப்பற்றிய ஈரான் படைகள்
சுமார் 382,000 லிட்டர் டீசல் எரிபொருளைக் கடத்தியதாகக் கூறப்படும் ஒரு வெளிநாட்டு கப்பலை, வளைகுடாக் கடற்பரப்பில் இன்று (02)புதன்கிழமை ஈரான் அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், அதில் இருந்த 11 வெளிநாட்டினரைக் கைது செய்ததாகவும் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
வடக்கு வளைகுடாவில் ஒரு கப்பலில் பெட்ரோலியப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஈரான் பாதுகாப்புப் படைகள் அந்த கப்பலுக்கு எதிராக ஒரு நடவடிக்கையைத் தொடங்கியதாக ஐஆர்என்ஏ கூறியது.
கப்பலில் இருந்த பதினொரு வெளிநாட்டினரும் தடுத்து வைப்பு
அபாதானில் உள்ள ஈரான் எல்லைக் காவலர்கள் அந்தப் கப்பலை வழிமறித்து, 382,000 லிட்டர் டீசலைக் கைப்பற்றியதாக அந்த அறிக்கை தெரிவித்தது. கப்பலில் இருந்த பதினொரு வெளிநாட்டினரும் தடுத்து வைக்கப்பட்டனர், இருப்பினும் அவர்களின் தேசியம் வெளியிடப்படவில்லை.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விவரங்களை வழங்கும் அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் ஈரான் அதிகாரிகளிடமிருந்து உடனடியாக வெளியிடப்படவில்லை.
கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியாவின் கைகளுக்கு சென்ற பெட்ரோலியம் வளமிக்க கடல் மேடை! போட்டுடைத்த காங்கிரஸ்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |