ஈரான் கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல்: பின்னணியில் நடந்தது குறித்து வெளிவரும் தகவல்
United States of America
Iran
Ship
Iran-Israel War
By Sumithiran
ஈரானின் ஐஆர்ஐஎஸ் டெனா போர்க்கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையிலேயே, அமெரிக்க நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையிடம் கப்பல் அனுமதி கோரியதாகவும், இராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில் கோரிக்கையை பரிசீலனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க மறுத்த சிறிலங்கா கடற்படைப்பேச்சாளர்
கப்பல் இலங்கைக்கு நுழைய அனுமதி கோரியதா என்பது குறித்த கேள்விக்கு கடற்படை பேச்சாளர், இந்த கட்டத்தில் கருத்து தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்குப் பின்னரே மேலதிக விபரங்களை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி