அமைச்சர் விஜித ஹேரத்தை திடீரென தொடர்பு கொண்ட ஈரான் வெளியுறவு அமைச்சர்
ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi), இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் நேற்று (13) தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் எடுத்து விளக்கியதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க தாக்குதலின்போது மூழ்கடிக்கப்பட்ட 'ஐரிஸ் டெனா'
அமெரிக்க தாக்குதலின்போது மூழ்கடிக்கப்பட்ட 'ஐரிஸ் டெனா' (IRIS Dena) எனும் ஈரானியப் போர்க்கப்பலின் பணியாளர்களை மீட்பதற்கும் கொல்லப்பட்ட 84 மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்ப உதவியதற்கும் அவர் இலங்கைக்கு நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, இரு வெளிவிவகார அமைச்சர்களும் இருதரப்பு உறவுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |