போப் லியோவுக்காக குரல் கொடுக்க தொடங்கிய ஈரான்! வியப்பில் சர்வதேசம்
வத்திக்கான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், போப் லியோ XIV-க்கு ஆதரவாக ஈரான் தற்போது குரல் கொடுத்துள்ளது.
போப் லியோவை ட்ரம்ப் விமர்சித்ததை "பெரிய அவமானம்" என கண்டித்துள்ள ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் தூதரான இயேசுவின் பிரதிநிதியை அவமதிப்பது எந்தவொரு சுதந்திர மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என தெரிவித்துள்ளார்.
கமேனியின் படுகொலை
பெசெஷ்கியனின் அலுவலகத் தகவல் தொடர்புத் துறை துணை அதிகாரி மெஹ்தி தபதாபாயி, போப் மீதான இந்தத் தாக்குதலை ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் ஒப்பிட்டுள்ளார்.

Image Credit: timson Center
இஸ்லாமிய தலைவரைப் படுகொலை செய்தபோது மேற்குலகம் மௌனமாக இருந்ததாலேயே, தற்போது கத்தோலிக்கத் தலைவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் துணிச்சல் அவர்களுக்கு வந்துள்ளதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
போப் லியோவின் பதில்
முன்னதாக, போப் லியோவை "வெளியுறவுக் கொள்கையில் மிகவும் மோசமானவர்" என்று ட்ரம்ப் சாடியிருந்த நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள போப், "ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டு எனக்கு எந்தப் பயமும் இல்லை; நற்செய்தியின் செய்தியை உரக்கச் சொல்வதே எனது பணி, அதை நான் தொடர்ந்து செய்வேன்" எனத் துணிச்சலுடன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்காவுடனான போர்ச் சூழலில் இருக்கும் ஈரான், கத்தோலிக்கத் தலைவருக்கு ஆதரவாகத் தார்மீக அடிப்படையில் களமிறங்கியிருப்பது சர்வதேச அரசியலில் ஒரு வியக்கத்தக்க திருப்பமாகக் கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |