ஈரான் மீதான தாக்குதல் : புதுக்கதையை அவிழ்த்துவிடும் ட்ரம்ப்
இஸ்ரேலை ஈரான் அணு ஆயுதங்களால் அழித்திருக்கக்கூடும் என்பதால், அந்நாட்டின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப்பிடம், ‘உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களும் ஈரானில் அமெரிக்காவின் தாக்குதல்களும் ஒத்துப்போயுள்ளதை ஆமோதிக்கிறீர்களா?’ என்ற கேள்வியொன்று எழுப்பப்பட்டது.
ஏராளமான அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள விரும்பிய ஈரான்
இது குறித்துப் பேசிய டிரம்ப் : “ரஷ்யாவின் நடவடிக்கைகள் எனக்கு ரசிக்கவில்லை. உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளிலிருந்து இது அதிகம் வேறுபட்ட ஒன்று.

கடந்த 47 ஆண்டுகளாக தீய சக்தியாகத் திகழுமொரு நாட்டைப் பற்றி நீங்கள் கேள்வியெழுப்பியிருக்கிறீர்கள். ஈரான் ஏராளமான அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள விரும்பியது. அவர்களால் உலகெங்கிலும் இறப்புகள் ஏற்பட்டன. பயங்கரமானவர்கள் அவர்கள்.
இஸ்ரேலை அழித்திருப்பார்கள்
நாங்கள் (அமெரிக்கா) மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகள் மீதும் சற்றும் எதிர்பாராமல் அவர்கள் தாக்குதல்களை நடத்தியிருப்பதைப் பாருங்கள். அப்படி அவர்கள் செய்யக்கூடாதல்லவா.

அதைப்பற்றி எவரும் நினைத்துப்பார்ப்பதேயில்லை. அவர்கள் மத்திய கிழக்கை கையகப்படுத்தி கட்டுப்படுத்த விரும்பினார்கள்.
இஸ்ரேலை நிரந்தரமாக வெளியேற்ற விரும்பினார்கள். அவர்களிடம் மட்டும் ஒரு அணு ஆயுதம் இருந்திருப்பின், அவர்களால் அதைச் செய்திருக்க முடியும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |