அமெரிக்க இடைக்காலத் தேர்தல் வருகைக்கு முன் ஈரான் போரை சாதகமாக்க முயற்சிக்கும் ட்ரம்ப்
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் முக்கியமான இடைக்காலத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்புக்கு ஈரான் போர் ஒரு அரசியல் தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு தரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டு கையெழுத்திடப்பட்டால், அந்த நிகழ்விற்காகத் தான் அங்கு செல்லக்கூடும் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளைய மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்களை மேற்கோள்காட்டியே சர்வதேச ஆய்வாளர்கள் நிலைப்பாடுகளை அறிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் விளக்கியுள்ளன.
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல், வரலாற்றிலேயே மிக மோசமான எண்ணெய் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது சர்வதேச நாணய நிதியம் உலகப் பொருளாதாரம் குறித்த தனது கண்ணோட்டத்தைத் தரம் குறைப்பதற்கும், நீடித்த மோதல் உலகைப் பொருளாதார மந்தநிலையின் விளிம்பிற்குத் தள்ளக்கூடும் என்ற எச்சரிக்கைக்கும் வழிவகுத்துள்ளது .
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்துவரும் பாகிஸ்தானிய வட்டாரம் ஒன்று வெள்ளிக்கிழமை அன்று, மறைமுக இராஜதந்திரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இரு தரப்பினருக்கும் இடையிலான வரவிருக்கும் சந்திப்பு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் முடிவடையக்கூடும் என்றும் தெரிவித்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இரு தரப்பினரும் முதலில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள், அதனைத் தொடர்ந்து 60 நாட்களுக்குள் ஒரு விரிவான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

"விரிவான ஒப்பந்தம் பின்னர் தான் கைகூடும். இரு தரப்பினரும் கொள்கை ரீதியாக ஒப்புக்கொள்கிறார்கள்.
தொழில்நுட்ப அம்சங்கள் பின்னர் தான் வரும்," என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரம் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.
முக்கிய பாகிஸ்தான் மத்தியஸ்தரான இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், புதன்கிழமை முதல் ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், "சிக்கலான பிரச்சினைகளில்" ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஒரு தூதரக வட்டாரம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |