அமெரிக்காவுக்கு பிரித்தானியாவின் மறைமுக உதவி! பகிரங்கமாக எச்சரித்த ஈரான்
அமெரிக்காவுக்கு பிரித்தானிய இராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதிப்பது தாக்குதலில் பங்கேற்பதாக கருதப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பிரித்தானிய உள்துறை அமைச்சர் யெவெட் கூப்பர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, அமெரிக்காவுக்கு பிரித்தானியா எந்த வகையில் உதவி வழங்கினாலும் அது நிலைமையை மேலும் தீவிரப்படுத்தும் என அராக்சி தெரிவித்துள்ளார்.
மௌனத்தில் பிரித்தானிய அரசு
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வெளிப்படையான தாக்குதல்களுக்கு எதிராக, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சார்பான அணுகுமுறையை பின்பற்றுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு, ஈரானின் South Pars எரிவாயு கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை பிரித்தானியா கண்டிக்காததையும் அவர் விமர்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |