போரில் மத்தியகிழக்கு நாடுகள் களமிறங்குவதை யாராலும் தடுக்க முடியாது: இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரான்
இஸ்ரேல் காசா மீது தரைவழி தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.
கடந்த 7ஆம் திகதி முதல் இஸ்ரேலிற்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது, இதில் இருதரப்பிலும் 4000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் இராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தப்போவதாக கூறியுள்ளது.
ஈரான் எச்சரிக்கை
இதனால் இஸ்ரேலிற்கு எதிரான கண்டன அறிக்கை ஒன்றை ஈரான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
குறித்த கண்டன அறிக்கையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசேன் அமிர் அப்துல்லா தெரிவித்துள்ளாதாவது, இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், தரைவழியாக தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும்' என கூறியுள்ளார்.
மேலும், காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தினால், போரானது மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவுதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. போர் பரவுவதைத் தடுக்க விரும்புபவர்கள், காசாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.